Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு விசேட பொருளாதார நிலையங்கள்

விசேட பொருளாதார நிலையங்கள்

கிராமப்புற உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை வழங்கும் பொருட்டு விற்பனை அபிவிருத்தி உபாயமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட பொருளாதார நிலையங்களை அமைக்கும் பணி 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கிராமிய தொழில் விருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட விசேட பொருளாதார நிலையங்களை அமைக்கும் பணியானது 2007 ஆம் ஆண்டிலே வர்த்தக, வியாபார அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிரகாரம் பொருளாதார நிலையங்கள் அனைத்தையும் இயக்கும் பணியை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற விடயங்கள் இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன.

பொருளாதார நிலையங்களை நிறுவுவதன் நோக்கம் பின்வருமாறு:

  • இலக்காகக் கொள்ளப்பட்ட சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விவசாய உற்பத்தியாளர்களுக்கு தமது பயிர்களுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுதல்.
  • சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் பிரயாணச் செலவினம் மற்றும் பிரயாணத்தின்போது ஏற்படக் கூடிய வீண் விரையங்கள் என்பவற்றினை குறைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அந்த உற்பத்தியாளர்களுக்கு வழங்குதல்.
  • மொத்த வியாபாரிகளுக்கு நேரடியாகவே உற்பத்தியாளர்களின் புதிய பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் என்பவற்றினை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்.
  • மொத்த வியாபாரிகளுக்கு போட்டித் தன்மைமிக்க வியாபார சூழலொன்றினை வழங்குவதன் மூலம் வர்த்தக சமூகத்தை ஊக்குவித்தல்.
  • ஒவ்வொரு பிரதேசங்களுக்கும்; முக்கியத்துவம் பெற்ற விவசாய உற்பத்திகளை நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களுக்கும் வழங்கக் கூடிய வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்.
  • உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பினை நுகர்வோருக்குப் பெற்றுக் கொடுத்தல்.
தேடுக :
x
தம்புள்ளை
மாத்தளை மாவட்டத்தின் தம்புல்ல பிரதேச செயலகப் பிரிவில் தம்புள்ளை நகரில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
தம்புத்தேகம
அநுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்புத்தேகம நகரில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
நுவரேலியா
நுவரேலியா மாவட்டத்தின் நுவரேலியா நகர மத்தியில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
கெப்பெட்டிபொல
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நுவரெலியா – வெலிமடை வீதிக்கு அருகாமையில் கெப்பெட்டிபொல நகரம் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
குருந்துவத்தை
கண்டி மாவட்டத்தின், நாவலப்பிட்டிய, குருந்துவத்த நகரில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
வேயாங்கொடை
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில் 329 பீ எனப்படும் ஹிரிப்பிட்டிய கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. நிட்டம்புவ - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் புகையிரத கடவைக்கு அருகாமையில் பண்டாரநாயக்க மாவத்தையில் வேயாங்கொடை சந்தைக்கு சுமார் 5 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
வெலிசரை

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை தேர்தல் தொகுதியில் கொழும்பு – நீர்கொழும்பு வீதிக்கு 700 மீட்டர் தூரத்தில் நவம்மஹர வெலிசரையில் அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க...
x
நாராஹேன்பிட்டி
நாராஹேன்பிட்டி சந்தியில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
இரத்மலானை
இரத்மலானை பிரதேசச் செயலக பிரிவினுள் கல்தெமுல்லை சந்தியில் இருந்து சுமார் 1. கி.மீ. தூரத்தில் எஸ். வீரசேன சில்வா மாவத்தையில் அமைந்துள்ளது. அதாவது இரத்மலானை உணவுத் திணைக்கள களஞ்சிய வளாகத்தில்.
மேலும் வாசிக்க...
x
மீகொட
கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகமை தேர்தல் தொகுதியில் மீகொடை புகையிரத நிலையத்திற்கும் மீகொடை நகரத்திற்கும் இடையே ஹோமாகமை நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
x
எம்பிலிபிட்டி
இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலக பிரிவினுள் எம்பிலிப்பிட்டிய புதிய நகரில் அமைந்துள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் எம்பிலிப்பிட்டிய நகரத்தின் எல்லை மாவட்டங்களாகக் காணப்படுகின்றன.
மேலும் வாசிக்க...
x
பிலியந்தலை
பிலியந்தலை போக்குந்தர சந்தியில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க...
காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 12-10-2017.