Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு அமைப்பு

அமைப்புகள்

திணைக்களங்கள்

விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்கம்

WEB  :  http://www.daph.gov.lk

விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்கம்

விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களமானது இலங்கையில் கால்நடை அபிவருத்திக்குப் பொறுப்பு வாய்ந்த பிரதான நிறுவகமாக 1978 இல் தாபிக்கப்பட்டதாகும். இது விலங்கு நோயகளை வராமல் துடுத்தல் மற்றும் அவற்றினைக் குணப்படுத்தல், தொழில்நுட்ப தலைமைத்துவத்தினை வழங்குதல், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரம் தொடர்பிலான சேவைகளின் நிபுணத்துவம் மற்றும் பின்னூட்டல் சேவைகளினை வழங்குதல் போன்ற நோக்கங்கங்களுடன் கால்நடை மூலவளத்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளினை நடாத்துவதற்கான சட்ட ரீதியான அதிகாரத்தினைக் கொண்டுள்ள ஒரு தேசிய நிறுவகமாகும். மேலும், பயிறிசியாளர்களை பயிற்றுவித்தல், கைத்தொழில் விரிவாக்கலுக்கான கருத்திட்டங்களினை வகுத்தல், பொருளாதார மதிப்பீட்டினை நடாத்துதல் மற்றும் நாடு பூராகவுமுள்ளடங்கும் வகையில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பிரதான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட அபிவிருத்தி திட்டங்களினை நடைமுறைப்படுத்துதல் என்பனவும் இதன் பிரதான தொழிற்பாடுகளும்.

மாகாணசபைகள் மட்டத்தில் விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களத்தின் கள மட்டத்திலான நடவடிக்கைகளின முன்னெடுத்தல் என்பன ஒன்பது (09)  மாகாண விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளன.

விலங்கு வேளாண்மைத் திணைக்களமானது மாகாண விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு தொழில்நுட்ப தலைமைத்துவம், நிபுணத்துவம் வாய்ந்த வைத்திய சேவை  மற்றும் ஏனைய ஆதரவு சேவைகளினை வழங்குவதன் மூலம் கால்நடைக் கைத்தொழில உற்பத்திக்கு பாரியளவிலான பங்களிப்பினை வழங்கு வருகின்றது. மிருக வைத்தியர்களினால் நிருவகிக்கப்படும் பேராதனை மிருக வைத்தியர் அலுவலகமானது தேசிய கால்நடைத் துறையில் பிரதான அலகாக தொழிற்பட்டு வருகின்றது. அத்துடன் தற்பொது தொழிற்பட்டு வரும் ஒவ்வொரு பிரதேச மிருக வைத்திய அலுவலகமும் உரிய மாகாண விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களத்தின் கீழ் அநேகமாக 324 பிரதேச செயலக பிரிவுகளில் தொழிற்பட்டு வருகின்றன.

நோக்கு

இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தி நோக்கிய கால்நடை கைத்தொழில் துறையின் முன்னோடி நிறுவனமாக விளங்குதல்

செயற்பணி

ஆரோக்கியமான விலங்கு வேளாண்மையினைப் பேணுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்தல் என்பவற்றினூடாக கால்நடைத் துறையில் நிலையான விருத்தியினை அடையச் செய்வதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவினை வழங்குதலும் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்புச் செய்தலும்.

பிரதான துறைகள்

  • பண்ணை விலங்குகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்
  • பண்ணைகளில் வளர்க்கப்படுகின்ற விலங்குகளின்ஆரோக்கியத்தினைப் பேணுதல்
  • சர்வதேச வர்த்தக மற்றும் தர உறுதிப்படுத்துகை
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல்
  • கால்நடைத் துறையில் சிறந்த முகாமையினைப் பேணுதல்

நோக்கங்கள்

விலங்கு நோய்களினைத் தடுத்தல் மற்றும் இல்லாதொழிப்பதற்கான பயனுறுதி வாய்ந்ததும் வினைத்திறன் வாய்ந்ததுமான விலங்கினங்களின் கிடைப்பனவினை உறுதி செய்தல்.

  • உயர்ந்த சாத்தியப்பாட்டு மட்டத்தில் விலங்கு மரபணு மூலவளங்களின் பயன்பாட்டினை ஊக்குவித்தல்.
  • தரமான விலங்குணவு மற்றும் உணவு முலவளங்களின் பயன்பாட்டினை ஊக்குவித்தல்
  • விலங்குணவு கைத்தொழில் வளர்ச்சியினை ஊக்குவித்தலும் விருத்தி செய்தலும்.
  • நிலையான கால்நடை அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி

நடவடிக்கைகளில் ஈடுபடுதல்

  • தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தப்பட்ட மனித வள விருத்தி
  • பயனுறுதி மற்றும் வினைத்திறன் வாய்ந்ததுமான தகவல் விநியோகம் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்குதல்
  • கருத்திட்டங்களை திட்டமிடல், கண்காணித்தல் மற்றும் கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் மதிப்பாய்வு
  • விலங்கு உற்பத்திகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல்
  • முறையான விலங்கு வேளாண்மை முறைகளினை ஊக்குவித்தலும் அவற்றினை வசதிப்படுத்தலும்
  • விலங்கு வளர்ப்பின் ஆரோக்கியம் மற்றும் நலன் பேணலினை உறுதி செய்தல்
  • நிறுவனசார் தொழிற்பாடுகளின் வினைத்திறன் வாய்ந்த முகாமைத்துவம்

தொழிற்பாடுகள் / சேவைகள்

  • தேசிய கருத்தடை சேவையினைக் கையாளுதல்
  • இனவிருத்தி நோக்கங்களுக்காக விலங்குகளின் மரபு வழி மற்றும் செயல்நிறைவேற்றம் ஆகியவற்றின் பதிவுகளைப் பேணுதல்
  • விலங்குகளின் மரபணு மூலவளங்களை பாதுகாத்தல்
  • ஆடுகளின் இனவிருத்தியினை அதிகரித்தல்
  • பசுக் கன்றுகளை வளர்க்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துதல்
  • ஊட்டச் சத்து நிறைந்த புற்களை உற்பத்தி செய்தலும் புற்களின் சந்தைப்படுத்தலினை ஊக்குவித்தலும்
  • விலங்கு நோய்களை வராமல் தடுப்பதற்கான தேசிய தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துதல்
  • மார்புப் புற்றுநோயினை குணப்படுத்தலும் வராமல் தடுத்தலும்.
  • உண்ணிக் காய்ச்சலினை கட்டுப்படுத்துதல்
  • கால்நடை கருச்சிதைவினைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
  • பாற் பண்ணைகளின் ஆரோக்கியத் தன்மையினை அதிகரித்தல்
  • கால் மற்றும் வாய் நோய்களினை கட்டுப்படுத்துகின்ற தடுப்பு மருந்துகளைத் தயாரித்தல்
  • புதிய கால்நடை ஆய்வு நிலையங்களை தாபித்தல்
  • அதிகரித்துச் செல்லும் கேள்வியினை நிறைவு செய்வதற்கான பரிசோதனை வசதிகளை விரிவாக்குதல்
  • முலை உட்பாய்ச்சல்களை உற்பத்தி செய்தல்
  • தனிமைப்படுத்தும் பிரிவுகளின் ஆய்வுகூட வசதிகள் மற்றும் உள்ளக கட்டமைப்பு வசதிகளினை அதிகரித்தல்
  • சல்மொனெலொசிஸ் மற்றும் ரணிகெற் நோய்களினை கட்டுப்படுத்துதல்
  • மரணத்தை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சலுக்கெதிராக வினைத்திறன் வாய்ந்த கட்டண விழிப்பூட்டல் முறைமையினை அறிமுகம் செய்தல்
  • கோழிப் பண்ணை நோய்களின் உண்மைத் தன்மையின் இனங்காணலினை அதிகரித்தல்
  • ஆய்வுகூட மற்றும் உள்ளக கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்புடைய பால் தொழில்நுட்பத்தினை அதிகரித்தல்
  • பிரதேச மட்டத்தில் பால் பகுப்பாய்வு வசதிகளை அதிகரித்தல்
  • பாற் பண்ணை தொடர்பான பகுப்பாய்வு மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்
  • நீண்ட காலத்திற்கு பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களின் பேணிப் பாதுகாப்புக்கான சாத்தியமான முறைமையினை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
  • கள மட்டத்தில் விலங்குகளை ஒழுங்கமைத்தல்
  • சந்தையில் தரமான விலங்குணவுகளின் போதுமான கிடைப்பனவினை உறுதி செய்தல்
  • கால்நடை உற்பத்திகளை ஒழுங்கமைத்தல்
  • கோழிப் பண்ணை நடவடிக்கைகளினை ஒழுங்கமைத்தல்
  • விலங்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினை அமுல்படுத்துதல்
  • கால்நடை ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
  • இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் மற்றும் செயன்முறைகளினூடாக தகவல்களினைப் பரவச் செய்தல்
  • மாதிரிப் பண்ணைப் பிரிவு செயன்முறை நிகழ்ச்சித்திட்டம்
  • கால்நடைகளின் தொழில்நுட்ப பூங்காக்களின் பல்வேறு பண்ணை பிரிவுகளினை விருத்தி செய்தலும் பேணுதலும்.
  • கால்நடைத் துறை மீதான சமூக பொருளாதார ஆய்வு
  • கால்நடைகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வகுத்தலும் விநியோகித்தலும்
  • மிருக வைத்திய அலுவலகங்களினை தாபித்தல்
Last Updated on Wednesday, 19 October 2016 09:31
 

ஏனைய நிறுவனங்கள்

இலங்கை கோழிப் பண்ணை அபிவிருத்தி (தனியார்) லிமிட்டட்.

நோக்கு

இலங்கையில் முன்னணி அபிவிருத்தி நிறுவகமாக தொழிற்படுவதனாடாக கிராமிய மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை மட்டத்தினை மேம்படுத்துதல்.

செயற்பணி

கிராம மட்டத்தில் கோழிப் பண்ணை மூலவளங்களினை விரிவாக்குவதன் மூலம் நிலையான அபிபிருத்தியினை அடைவதற்கான சாத்தியமான உயர்ந்த மட்டத்தில் கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட மூலவளங்களினை முகாமை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளினை எடுத்தல்

பிரதான துறைகள்

  • தனியார் துறையிலுள்ள விவசாயிகள், அரச நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைச்சுக்களுக்கிடையில் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் நிறுவகமாக தொழிற்படுதல்
  • கோழிப் பண்ணையுடன் தொடர்புடைய அனைத்து இனவிருத்தி நடவடிக்கைகள், முட்டையிடும் மற்றும் புரொயிலர் உற்பத்திகளினைத் தொடர்ந்தும் பேணுதல்
  • இலங்கை கோழிப் பண்ணை அபிவிருத்தி (தனியார்) லிமிட்டட்டின் வழிற்பனை நிலையங்களினூடாக நியாயமான விலையில் நுகர்வோருக்கு அனைத்து பண்ணை உற்பத்திகளினையும் கிடைக்கச் செய்தல்
  • பண்ணையிலுள்ள கோழிகளுக்கான உணவு மற்றும் பண்டகசாலை வசதிகளின் முழு உற்பத்தி தேவையினை ஊக்குவித்தல்
  • நியாயமான விலைகளில் கிராமிய மக்களின் ஊட்டச்சத்து மேம்படுத்தலுக்கது தேவையான கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் கிடைப்பனவினை உறுதி செய்தல்
  • சிறிய கோழிப் பண்ணையாளர்களுக்குத் தேவையான கோழிக் குஞ்சுகளை விநியோகித்தல்
  • வருமான பெருப்பித்தலுக்காக தெங்கு பயிரிடல் நடவடிக்கைகளினை முறையாக பேணுதலும் அதனைக் கோழிப் பண்ணை அபிவிருத்திக்குப் பயன்படுத்துதலும்
  • வருமானம் ஈட்டும் பயிர்களை விரிவாக்குவதன் மூலம் ஆகக்கூடிய உற்பத்தி திறனை ஈட்டுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல் மற்றும் பண்ணையில் இணை  பயிற் செய்கையினைமேற்கொள்ளுதல்

 

நோக்கங்கள்

  • கோழிப் பண்ணை கைத்தொழிலினை விருத்தி செய்வதுடன் தொடர்புடைய  ஏனைய கருத்திட்டங்களை இனங்காணுதலும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவினைப் பிரயோகித்தலும்
  • கோழிப் பண்ணைக் கைத்தொழிலினை விருத்தி செய்வதற்குத் தேவையான ஆளணி வளங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளுதல்
  • கோழிப்ப ண்ணைக் கைத்தொழிலினை விருத்தி செய்வதற்குத தேவையான உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் கொள்வனவாளர்களை இனங்காணலும் கைத்தொழிலுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகள் உள்ளடங்கலான அனைத்து நிறுவனசார் ஒருங்கிணைப்புக்களையும் மேற்கொள்ளுதல்
  • அரச கோழிப்பண்ணை இனவிருத்திப் பண்ணைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல்
  • கோழிப்பண்ணைத் தொழிலில் நாடளாவிய ரீதியில் ஈடுபடுகின்ற சமூக அடிப்படையிலான நிறுவனங்களினை நவீனமயப்படுத்துதலும் வலுவுட்டுதலும்
  • சேதன வளமாக்கி உற்பத்தி

தொழிற்பாடுகள்

 

  • விவசாயிகளுக்கு  தரமான ஒரு நாள் கோழிக் குஞ்சுகளின் கிடைப்பனவினை உறுதி செய்தல்
  • நிறுவனத்தின் விற்பனை நிலையங்களினூடாக நுகர்வொருக்கு போட்டி விலையில் முட்டைகளையும் கோழி இறைச்சிகளையும் வழங்குதலும் அவற்றின் ஊட்டச் சத்து நிலையினை அதிகரித்தலும்
  • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவர்கள் உள்ளடங்கலான கோழிப் பண்ணைக் கைத்தொழிலில் ஆர்வமுடைய அனைவருக்கும்  கோழிப் பண்ணை தொடர்பான செய்முறை மற்றும் கோட்பாட்டு ரீதியான பயிற்சியனை வழங்குதல்
  • பயிரிடலுக்குத் தேவையான நாற்று நடல் பொருட்கள் மற்றும் சேதன வளமாக்கிகளின் விற்பனை
  • நிறுவனத்திலுள்ள ஊழியர்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்துதல்
Last Updated on Wednesday, 19 October 2016 08:48
 

மஹாவலி கால்நடை தொழில் முயற்சிகள் லிமிட்டட்

மஹாவலி கால்நடை தொழில் முயற்சிகள் லிமிட்டட்

நோக்கு

நியாயமான விலையில் உள்ளூர் சந்தைகளில் தரமான ஒரு நாள் குஞ்சுகள் மற்றும் புரொயிலர் கோழிகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் வழங்குனராக விளங்குதல்

 

செயற்பணி

நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி சர்வதேச தர நியமங்களுக்கமைவாக ஒரு நாள் குஞ்சுகள் மற்றும் புரொயிலர் கோழிகளின் தரத்தினை மேம்படுத்துதல்

 

நோக்கங்கள்

  • v  சந்தையில் நிலையான விலைகளினைப் பேணுதல் மற்றும் விலங்குகளை இனவிருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் மனித நுகர்வுக்குத் தேவையான விலங்குகள், விலங்குத் தசை மற்றும் முட்டைகள் போன்றவற்றினை உற்பத்தி செய்தல் மற்றும் விலங்கினங்களை இனவிருத்தி செய்தல்
  • மஹாவலி முறைமை “H” இலுள்ள விவசாயிகளை அவர்களின் சம்பாத்தியங்களை அதிகரித்தல், வேலைவாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் நலன்புரி வசதிகளை வழங்குதல் போன்றவற்றினை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவித்தல்

முக்கியமான பகுதிகள்

ஒரு நாள் புரொயிலர் கோழிக் குஞ்சுகள் மற்றும் கோழிகளின் உற்பத்தி

 

செயற்பாடுகள்

  • v  இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விலங்குகளைக் கொண்டிருக்கின்ற தாய்க் கோழித் தொகுதியினைப் பேணுதல்
  • அரைத் தன்னியக்க குஞ்சு பொரிக்கும் பொறிமுறையினைப் பேணுதல்
  • வர்த்தகசார் புரொயிலர் அலகினைப் பேணுதல்
  • மஹாவலி முறைமை “H” இல் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற பண்ணையாளர்களின் ஒருங்கிணைப்புக்கான வெளியகப் பிரிவினைப் பேணுதல்
  • ரைத் தன்னியக்க ஆராக்கியமான உரிய தர நியமத்தில் கோழி இறைச்சி உற்பத்திக்கான தன்னியக்க செயல்முறைப்படுத்தல் தொழிற்சாலையினைப் பேணுதல்
  • கோழி உணவு உற்பத்தி
  • கம்பனி உற்பத்திகளினைச் சந்தைப்படுத்தலுக்காக விற்பனை நிலையங்களினைப் பேணுதல்
Last Updated on Wednesday, 19 October 2016 08:31
 

மில்கோ (தனியார்) லிமிட்டட்

மில்கோ (தனியார்) லிமிட்டட்

நோக்கு

இலங்கையின் அதி உன்னதமான போஷாக்கு உணவினை வழங்கும் கம்பனி ஆகுதல்

எமது பணி

உள்நாட்டு பாற் பண்ணையாளர்களுக்கு வலுவூட்டி  பசும் பால் உற்பத்தியில் இலக்காகக் கொள்ளபட்ட வளர்ச்சியை அடைவதில் செயலூக்க மிக்க ஒரு பங்காளராக இருத்தலும் நுகர்வோரால் தாங்கிக் கொள்ள முடியுமான  போசணைமிக்க உணவுப் பானங்களை வழங்குவதில் நவீன தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட முன்னேற்றகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுதலும்

 

பிரதான துறைகள்

இந் நிறுவனம் 03 பிரதான துறைகளில் தனது தொழிற்பாடுகளை  மேற்கொண்டுள்ளது.

  • உள்நாட்டுப் பாற் பண்ணையாளர்களின் உற்பத்திகளைச் சேகரித்தல்
  • பாலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் ஈடுபடுதல்
  • அவ் உற்பத்திகளை "ஹைலண்ட்" வர்த்தக நாமத்தின் கீழ் நாடு முழுவதிலும் விநியோகிக்கின்றது.

 

குறிக்கோள்கள்

  • உயர் தரத்திலான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பானங்களை வழங்குல்
  • பசும் பாலில் நாடு தன்னிறைவடைவதற்குப் பங்களிப்புச்  செய்தல்
  • உள்நாட்டு பாற் பண்ணையாளர்களுக்கு வலுவூட்டுதல்
  • உள்நாட்டுப் பாற்பண்ணைத் தொழில்துறையினதும் கம்பனியினும் இருப்பையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துதல்
  • எமது பணிக்குப் பங்களிப்புச்  செய்பவர்களின் திருப்தியை உறுதிப்படுத்துதல்

துறைசார் நோக்கங்கள்

  • 2020 ஆம் ஆண்டாகும் போது சுயமாக இயங்கும் பாற் பண்ணையாளர் சங்கங்களின் எண்ணிக்கையை 4,500 வரை அதிகரிகரிப்பதற்கும், அவற்றைப பதிவு செய்யப்பட்ட செய்வதன் ஊடாகச் சுயமாக இயங்கும் பாற் பண்ணையாளர் சங்கக் கோட்பாட்டைப் பிரபல்யப்படுத்தி பலப்படுத்தி பால்  சேகரிப்பு வலையமைப்பிற்கு வலுவூட்டுதல்.
  • v2020 ஆம் ஆண்டாகும் போது 2,000 பண்ணையாளர்களின் நாளாந்த உற்பத்தியை 100 லீற்றர் வரை மேம்படுத்துதல்.
  • தெரிவுசெய்யப்பட்ட பாற் பண்ணையாளர்கள் 2,000 பேரின் உற்பத்திச் செலவுவை 2017 ஆம் ஆண்டாகும் போது 5%ஆல் குறைத்தல்.
  • எந்தவொரு தடையுமின்றி "ஹைலண்ட்" உற்பத்திகள் தொடர்ச்சியாகச் சந்தைக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
  • 2016 ஆம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் உற்பத்திகளின் தர நியமங்களை அதிகரிக்கும் அதேவேளையில், உற்பத்தி வசதிகளினை நவீனமயப் படுத்துவதனூடாக தற்போதைய நட்டங்களை 50% வரையில் குறைவடையச் செய்தல்.
  • 2017 ஆம் ஆண்டளவில் அதி உச்ச மட்டத்திலான உற்பத்தித்திறனை அடைதல்.
  • 2017 ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா. 12 பில்லியனுக்கு மேற்பட்ட வருடாந்த வர்த்தக வெளியீட்டினை விஞ்சுதல்.
  • 2020 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்திப் பொருட்களின் தேசிய அளவிலான தேவைப்பாட்டினை 50 இனை அடையப் பெறுதல்.
  • 2017 இன் இறுதியில், நாடளாவிய ரீதியில் 50,000 சில்லறை விற்பனை நிலையங்களினை உள்ளடக்கும் வகையில் விநியோக வலையமைப்பினை விரிவாக்குதல்
  • 2017 இ ன் இறுதியில் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய முக்கிய பொது இடங்களில் 600 புதிய விற்பனை நிலையங்களினை தாபித்தல்.

தொழிற்பாடுகளும் சேவைகளும்

நிறுவன தொழிற்பாட்டின் பிரதான துறைகளாக இருக்கின்ற பால் / பால் உற்பத்திப் பொருட்களின் சேகரிப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம் என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு கம்பனியினால் பின்வரும் தொழிற்பாடுகளும் சேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன.

  • சுயமாக இயங்கும் பாற் பண்ணையாளர் சங்கக் கோட்பாடு தொடர்பில் பாற் பண்ணையாளர்களுக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டி அவர்களுக்கு ஐக்கியப்படுத்துதல்
  • தற்போது நாடு முழுவதிலும் சுமார் 2,200 பாற் பண்ணையாளர் சங்கங்கள் காணப்படும் அதேவேளை சுமார் 60,000 பாற் பண்ணையாளர்கள் இச்சங்கங்களில் அங்கம் வகிக்கின்றனர்.
  • செயலூக்கமிக்க விரிவாக்கற் சேவைகளையும் வசதிகளையும் வழங்குவதன் ஊடாகப் பாற் பண்ணைகளை அபிவிருத்தி நடவடிக்கை எடுத்தல்
  • பசும் பாலுக்கு உயர் உத்தரவாத விலையை வழங்குவதன் ஊடாக உள்நாட்டு பாற் பண்ணையாளர்களைப் பாதுகாத்தல் - உயர் தரத்திலான ஒரு லீற்றர் பாலுக்கு 70/- ரூபா என்ற விலை பாற் பண்ணையாளர்களுக்குச்  செலுத்தப்படும்.
  • நாடாளாவிய பால் சேகரிப்பு வலையமைப்பின் ஊடாக பண்ணையாளர்களின் பால் உற்பத்திகளை இலகுவாக விற்பனை செய்வதற்காகத் தொடர்ச்சியாக வசதிகளை வழங்குதல் -  இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 86 பால் குளிரூட்டும் நிலையங்கள் நாடு முழுவதிலும்
  • மாதாந்த சுமார் 20 மில்லியன் ரூபாவைச்  செலவு செய்து பாற் பண்ணையாளர்களின் பால் உற்பத்திகளை பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு இலவசமாக கொண்டு செல்லுதல்
  • மில்கோ பாற் பண்ணையாளர் சமூக பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக அடையாளம் காணப்பட்ட 18 சந்தர்ப்பங்களின் கீழ் பாற் பண்ணையாளர்களுக்கு் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் நிதி உதவிகளை வழங்குதல் - கடந்த வருடத்தில்  5,602 பயனாளிகளுக்கு 27 மில்லியன் ரூபா பயன்காள வழங்கப்பட்டுள்ளன.
  • நிறுவனத்திடம் காணப்படும் கொழும்பு, திகணை, அம்பேவலை, பொலனறுவை தொழிற்சாலைகளின் ஊடாக போஷாக்குள்ளதும் சுகாதாரப் பாதுகாப்புள்ளதுமான 11 வகையான பால் உற்பத்திகள் பல்வேறுபட்ட சுவைகளை உள்ளடக்கியதாக 52 அலகுகளில் உற்ப்பத்தி செய்தல்

 

  • நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்களின் ஊடாக உற்பத்திகளை  ஹைலண்ட் வர்த்தக நாமத்தின் கீழ் அடிப்படையில் நுகர்வோருக்க நியாயமான விலையில் வழங்குதல்
Last Updated on Thursday, 26 October 2017 04:03
 

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, 1972 இன் 11ம் இலக்க விவசாய கூட்டிணைப்புச் சட்டத்தின் கீழ் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட கள நடவடிக்கைகளுடன் 1973 இல் ஸ்தாபிக்கப்பட்டது. சபையின் பணிகளும் நடவடிக்கைகளும் தேசிய பசுக்களின் எண்ணிக்கை அருகுதலைத் தடுத்தல் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 1977 இல் மீளமைக்கப்பட்டது. அதற்கமைய உயர் இனப் பசுக்கள், எருதுகளை வளர்த்தல் சம்பந்தமாக கவனத்திற் கொள்ளப்பட்டது. தற்போது தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, 30 கால்நடை மற்றும் பயிர் ஒருங்கிணைந்த பண்ணைகளைப் பேணி வருகிறது. அத்துடன் சபையானது, கமக்காரர்களின் தத்துவ மற்றும் பிரயோக அறிவை மேம்படுத்தும் பயிற்சி நிலையம் ஒன்றையும் கொண்டுள்ளது.

நோக்கு

திருப்திகரமானதொரு தொழிற் பலத்துடன் பல்வேறு விவசாய சூழலில் பல்வேறு விவசாயச் சூழலியல் வலயங்களில் கால்நடை மற்றும் பயிர் ஒருங்கிணைந்த பண்ணைகளின் சுய நிலைபேற்றுச் சங்கிலி ஒன்றை இயக்குதல்

செயற்பணி

திருப்திகரமானதொரு தொழிற் பலத்துடன் பல்வேறு விவசாய சூழலியல் வலயங்களில் கால்நடை மற்றும் பயிர் ஒருங்கிணைந்த பண்ணைகளின் சுய நிலைபேற்றுச் சங்கிலி ஒன்றை இயக்குதல்

குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் பால் உற்பத்திகளில் நாடு தன்னிறைவை அடையும் நோக்கில் பண்ணையாளர்களிற்குத் தேவையான இனவிருத்தி விலங்குகளை வழங்குதற்காக குறித்த காலப்பகுதியினுள் கால்நடைச் செயற்பாடுகளை விருத்தி செய்தல்
  • நிறுவனத்தின் வெளியீடு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய, கால்நடை உற்பத்திகளை விருத்தி செய்தல்
  • நாட்டில் பணப்பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட கால்நடை மற்றும் விவசாயத் துறைகளில் உச்ச அளவு உற்பத்தித்திறன் மட்டங்களை எய்துதல்.
  • கால்நடை மற்றும் விவசாயத் துறைகளின்உற்பத்தி மட்டத்தினை உயர்ந்த நிலையில் பேணுதல்
  • கால்நடை மற்றும் பயிர் ஒருங்கிணைந்த பண்ணை முறைகளிலிருந்து அதியுயர் உற்பத்தித்திறனைப் பெறுதலும் சூழல் இணக்கப்பாட்டு பயிர்ச்செய்கைப் பழக்கவழக்கங்களினைப் பின்பற்றுதலும்.
  • கைத்தொழில் அடிப்படையினைச் சேர்ந்த தெங்கிலிருந்தான மிகை நிதியங்களைச் செலுத்தி உச்ச அளவில் சகல பண்ணைச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
  • சந்தையில் உற்பத்தித்திறனை மேம்படுத்தல், செலவைக் குறைத்தலின் பொருட்டு சிறந்த முகாமைப் பழக்கங்களுடனான புதிய தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் முதலீட்டினை அறிமுகஞ் செய்தல்.
  • தனியார் துறையின் பங்களிப்புடன் இப்பண்ணைப் பிரிவுகளினை இலாபமீட்டும் வர்த்தக நிறுவனங்களாக மாற்றும் பொருட்டு சிறந்த சந்தையிடல் முறைகளுடனான புதிய சந்தை வாய்ப்புக்கள் குறித்து ஆராய்தல்

 

குறிக்கோள்கள்

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, கால்நடைப் பண்ணையாளர்களிற்கும் கால்நடை உற்பத்தியாளர் சங்கங்களிற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் அரச சாரபற்ற நிறுவனங்களுக்கும் நடைமுறையிலுள்ள அரச மற்றும் தனியார் வேலைத்திட்டங்களுக்கும் உயர் இன விலங்குகளை குறைந்த விலைக்கு வழங்குகிறது.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, அதனை இலாபமீட்டும் தலமாக மாற்றும் பொருட்டு பண்ணையாளர்களிற்கு விலங்கு வளர்ப்பு சம்பந்தமான அறிவை வழங்குதலையும் மேற்கொள்கிறது. இந்நோக்கத்தை எய்தும் பொருட்டு ஒவ்வொரு விவசாய – சூழலியல் வலயங்களிற்கும் பொருத்தமான கலப்பின மற்றும் தனியின நிகழ்ச்சித்திட்டங்கள் வழங்கப்பட்டன. கால்நடை அபிவிருத்தித் துறையானது, சுய வேலைவாய்ப்புத் தொழில்களை உருவாக்குதல், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் போஷாக்கு மட்டத்தை அதிகரித்தலில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. அத்துடன் சூழல் இணக்க காணி முகாமை உத்திகள் தே.கா.அ.ச. இனால் முகாமையிடப்பட்ட காணிகளில் மண் வளத்தின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டும் சேதன மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டும் பிரயோகிக்கப்படுகின்றன.

 

பிரதான செயற்பாடுகள்

  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் பெருக்கமடைதல்
  • பண்ணையாளர்களிற்கு தரமான விலங்கினங்களை இனப்பெருக்கத்திற்காக நியாயமான விலையில் வழங்குதல்
  • அதியுயர் இலாபத்தை ஈட்டும் பொருட்டு தென்னந் தோட்டங்களை உயர் மட்டத்தில் பேணுதல்
  • சாத்தியமானவிடத்து கால்நடை/ பயிர் ஒருங்கிணைந்த பண்ணை முறையைக் கையாளுதல்
  • விவசாயத்தில் ஈடுபடும் பண்ணையாளர்கள், பாடசாலைச் சிறுவர்கள், அலுவலர்கள், விசேடமாக சிறியளவிலான கால்நடைப் பண்ணையாளர்களிற்கு பயிற்சி மற்றும் விளக்கமளித்தல் வசதிகளை வழங்குதல்
  • தரமான பண்ணை உற்பத்திகளை நியாயமான விலையில் வழங்கும் பொருட்டு சந்தைப்படுத்தல் நிலையங்களை தாபித்தலும் பராமரித்தலும்
  • உயர் இலாபத்தைப் பெறும் பொருட்டு பண்ணைகளில் தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர் உற்பத்திகளைத் தயாரித்தல்
  • மக்களிடையே உடன் பால் நுகர்வை அதிகரிக்கும் பொருட்டு விற்பனை நிலைய வலையமைப்பைப் பேணுதல்
Last Updated on Thursday, 09 March 2017 09:21
 

பொருளாதார வர்த்தக நிலையங்கள் (DECs)

விசேட பொருளாதார நிலையங்கள்

கிராமப்புறங்களிலுள்ள உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வசதிகளை வழங்குவதற்கு விவசாய சந்தைப்படுத்தல் அபிவிருத்தி  தந்திரேபாயத்தினை அமுல்படுத்தும் வகையில் அரசாங்க வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி  பொருளாதார வர்த்தக நிலையங்களை அமைக்கும் பணியானது 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது.

கிராமிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட பொருளாதா நிலையங்களை தாபிக்கும் விடயமானது, 2007 இல் வர்த்தக, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவைகள் அமைச்சுக்கு உருத்தளிக்கப்பட்டது.  அதற்கிணங்க, தற்போது அனைத்து பொருளாதார நிலையங்களின் ஒருங்கிணைவு மற்றும் தொழிற்பாட்டு மேற்பார்வை என்பன கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது நாடு பூராகவும் 13 பொருளாதார நிலையங்கள் தொழிற்பட்டு வருவதுடன் எதிர்காலத்தில் அம்பாறை மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் திற்நது வைக்கப்படவுள்ளன.

நோக்கு

இலங்கை நுகர்வோர்களினதும் உற்பத்தியாளர்களினதும் வாழ்க்கை மட்டத்தினை உயர்த்துவதனூடாக இலங்கையை ஆசியாவின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தனைக் கொண்ட நாடாக மாற்றியமைத்தல்

செயற்பணி

உற்பத்தியாளர்களுக்கு உயர்ந்த விலையினையும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான உற்பத்திகளையும் வழங்குதல்

பிரதான இலக்கு

நிறைபோட்டிச் சந்தை முறைமையினை தாபிப்பதனூடாக நியாயமான சந்தை முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்காக மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்களினைத் தாபித்தல்

நோக்கம்

  • உற்பத்திகளுக்கான இலக்குடன் சந்தையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையினைப் பெற்றுக்கொடுத்தல்
  • நுகர்வோருக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான  வசதிளை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • மொத்த வியாபாரிகளுக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நியாயமான விலைகளில் வாய்ப்புக்ளை எற்படுத்திக் கொடுத்தல்
  • போட்டியுடன் கூடிய சூழலில் மொத்த விற்பனையை நடாத்திச் செல்வதற்கு வர்த்தகர்களை ஊக்குவித்தல்

தொழிற்பாடுகள்

  • புதிய தரமான விளைபயிர்களின் உற்பத்திகளை விசேடமாக, குறித்த இடத்தில் விசேடமாக உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திகளை சேகரித்தலும் விநியோகித்தலும்.
  • மொத்த மற்றும் சில்லறை வியாபாரம்
  • உற்பத்தியாளரிலிருந்து பாவனையாளர் வரையிலான விநியோக வலையமைப்பில் இடைத்தரகர்களினைக் குறைப்பதற்கு நடவடிக்க எடுத்தல்
  • ஒரே கூரையின் கீழ் நுகர்வோர் தமக்குத் தேவையான பொருட்கள் சேவைகளினைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியளித்தல்
  • போட்டி சூழலில் முழுப் பொருளாதாரத்திற்கும் நிலையான விலை மட்டத்தினைப் பேணுதல்

 

பொருளாதார நிலையங்கள் பின்வரும் மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.

  • விவசாய உற்பத்தி பிரதேசங்களின் அடிப்படையிலான மொத்த விற்பனை நிலையங்கள்
  • விவசாய உற்பத்திகள் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்களின் சில்லறை / மொத்த விற்பனை விநியோக நிலையங்கள்
  • நகரப் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட சில்லறை விற்பனை நிலையங்கள்

 

பொருளாதார நிலையங்களின் அமைவிடங்கள்

மாகாணம்

உற்பத்தி செய்யப்படும் பிதேசத்திலுள்ள நிலையங்கள்

உற்பத்தி செய்யும் பிரதேசத்திலுள்ள விநியோக நிலையங்கள்

(மொத்த/ சில்லறை)

நகர எல்லைக்குள் சில்லறை விநியோகத்தினை மேற்கொள்ளும் நிலையங்கள்

திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையங்கள்

மேல்

வெலிசறை

மீகொட

வெயாங்கொடை

இரத்மலானை

நாரஹென்பிட்டி

பிலியந்தலை

மத்திய

நுவரெலியா

தம்புள்ள

குருந்துவத்தை

கந்தஹந்திய

வட மேல்

வாரியபொல*

ஊவா

கெப்பெட்டிப்பல

வட மத்தி

தம்புத்தேகம

சப்பிரகமுவ

எம்பிலிபிட்டிய

கிழக்கு

அம்பாறை

வடக்கு

கிளிநொச்சி

*தொழிற்படாத நிலையிலுள்ளவை

 

பொருளாதார வர்த்தக நிலையங்கள் பற்றி மேலும் விபரங்கள் பெற என்னை சொடுக்கவும்

Last Updated on Wednesday, 19 October 2016 08:54
 

நெல் சந்தைப்படுத்தும் சபை

நோக்கு

விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்யும், வழிநடாத்தும் முன்னோடி தேசிய நிறுவனமாகத் திகழுதல்.

செயற்பணி

விவசாய உற்பத்தியாளரும், நுகர்வோரும் திருப்திப்படுகின்ற சந்தை முறைமையொன்றை அமுல் செய்தல்.

குறிக்கோள்கள்

1971 மார்ச் மாதம் 16 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற சபையின் பிரதான குறிக்கோள்கள்:

  1. நெல் மற்றும் அரிசி இருப்புகளைக் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், வழங்கல், விநியொகித்தல் முதலான நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில் முயற்சியொன்றை நடாத்திச் செல்லல்.
  2. நெல்லைக் குற்றி அரிசியாக்கும், வத்தமைக்கும் தொழில் முயற்சியொன்றை நடாத்திச் செல்லல்.
  3. மேலே (அ), (ஆ) பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிகோள்களை அடையும் வகையில், துணையாக அமையும் வேறு வியாபார நடவடிக்கைகளை நடாத்திச் செல்லல்.
  4. சபை கருதுகின்றவாறு வர்த்தக, வியாபார நடவடிக்கைகளை உரியவாறு நடாத்திச் செல்வதற்கு தேவையெனக் கருதும் அனைத்துப் பணிகளையும் முற்று முழுதாக நிறைவேற்றுதல்.


நெல் இருப்புகளைக் கொள்வனவு செய்யும் ஏகபோக பயன்களை அனுபவித்து வரும் நிலையிலேயே மேற்சொன்ன குறிக்கோள்கள் தீர்மானிக்கப்பட்டது.

திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக நெல்/அரிசிக் கைத்தொழில் தனியார்துறை மூலம் நிருவகிக்கப்படுவதால், மேற்சொன்ன குறிக்கோள்களை அடைவதில் சிரமங்கள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, விதிக்கப்பட்ட பணிச்சட்டத்தினுள் இருந்து கொண்டு செயற்படுகின்ற நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு தனியார்துறையுடன் போட்டி போடுவதற்கு அனுமதி இல்லாதிருப்பதாகும்.

நெல் சந்தைப்படுத்தல் சபை மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பின்வரும் குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கருத்திற்கொண்டு செயற்பட நேரிட்டது.

  • விவசாய உற்பத்திகளை கொள்வனுவு செய்தல், விற்பனை செய்தல், வழங்கல், விநியோகித்தல் என்பவற்றை மேற்கொள்வதற்காக தொழில் முயற்சியொன்றை நடாத்திச் செல்லல்.
  • விவசாய உற்பத்திகளின் பண்பினையும், தரத்தினையும் மேம்படுத்துவதற்கு உற்பத்தியாளர்களைத் தூண்டுதல்.
  • நுகர்வுக்காக விவசாய உற்பததிகளை தயாரித்தலும், விநியோகித்தலும்.
  • அரசாங்கத்தின் தேவைகளுக்கேற்றவாறு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு இருப்பொன்றைப் பேணிச் செல்லல்.


நுகர்வோருக்கு தரத்தில் சிறந்த நெல், அரிசி மற்றும் அரிசி சார்ந்த உற்பத்திகளை நியாய விலைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், நெல் உற்பத்திகளுக்கு உத்தரவாத விலையொன்றைப் பெற்றுக் கொடுத்து, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் விவசாய மக்களுக்கும், நுகர்வோருக்கும் பேருதவியாக அமைந்துள்ளது.

எனினும், நெல்/அரிசிக் கைத்தொழிலை இலங்கை விவசாய மக்களுக்கு சாதகமான மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கான வழியை வகுத்து, அதற்குத் தேவையான ஒத்துழைப்பை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட உத்தரவாத விலைமுறையை நடைமுறைப்படுத்திய நெல் சந்தைப்படுத்தல் சபை மூலமே வழங்க முடிந்தது.

web : www.pmb.gov.lk

Last Updated on Wednesday, 19 October 2016 09:20
 

 

சமீப செய்திகள்

அம்பாறை விசேட பொருளாதார மத்திய நிலையம் அம்பாறை விசேட பொருளாதார மத்திய நிலையம்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான விசேட ப...
•	வட மகாணத்திற்கு கால்நடைப் புலனாய்வு மத்திய நிலையம் ஒன்று • வட மகாணத்திற்கு கால்நடைப் புலனாய்வு மத்திய நிலையம் ஒன்று
வட மாகாணத்திற்கான கால்நடைப்புலனாய்வு மத்...

காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 04-12-2017.