Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மை பற்றி மீள்பார்வை

மீள்பார்வை

நோக்கு

நிலையான கிராமிய பொருளாதாரத்தினூடாக வளமான நாட்டினை உருவாக்குதல்

செயற்பணி

கிராமிய மக்களின் பொருளாதார நிலையினை விரிவாக்குவதற்கான வாழ்வாதார அபிவிருத்தி, உள்நாட்டு கேள்வியினை நிறைவு செய்யும் வகையில் தரமான கால்நடை உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் சர்வதேச சந்தையில் காணப்படும் போட்டியினை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்காக வளமான உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்

நோக்கங்கள்

  • கிராமிய மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்களினை அமுலாக்குவதற்குத் தேவையான  நிதி ரீதியான ஆதரவினை வழங்குதல் மற்றும் சிறிய தொழில் முயற்சியுடமை அபிவிருத்திக்கான கிராமிய உள்ளக கட்டமைப்பு வசதிகளினை மேம்படுத்துதல்
  • கால்நடை கைத்தொழில் அபிவிருத்திக்கான உயர் உற்பத்தித்திறனுடன் கூடிய விலங்கு இனப்பெருக்கத்தினைஅதிகரித்தல், அதற்குத தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவதற்கு உதவுதல்
  • ஆரோக்கியமான விலங்கின விருத்திக்குத் தேவையான தரமான விலங்குணவுகளைத் தயாரித்தல் மற்றும் விலங்கு நோய்களினைத் தடுத்தல் அல்லது இல்லாதொழித்தல் தொடர்பில் வினைத்திறன் வாய்ந்த விலங்கு சுகாதார நலன் பேணல் சேவை அமுலாக்கலினைஉறுதி செய்தல்
  • உயர்ந்த உற்பத்தித் திறனினைப் பெற்றுக் கொள்வதற்காக தரமான விலங்கு மரபணுவின் ஆகக்கூடுதலான பயன்பாட்டினை ஊக்குவித்தலும் உள்ளூர் விலங்கினங்கள்ளை விருத்தி செய்தலும்
  • கால்நடை உற்பத்தி தொடர்பான சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, செயல்முறைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்ப்பு என்பவற்றுடன் தொடர்புடைய தரப்புக்களை ஊக்குவித்தல்
  • உள்நாட்டு பாற் பண்ணையாளர்களினை வலுப்படுத்துவதனூடாக திரவப் பால் உற்பத்தி இலக்குகளை அடைவதற்கான பங்களிப்புக்களை வழங்குதல்
  • தேசிய விவசாய சந்தைப்படுத்தல் அதிகாரசபையினை தாபித்ததன் மூலம் பிரதேச/ கிராமிய மட்டத்தில் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் / களஞ்சியப்படுத்தும் செயல்முறையினை ஒருங்கிணைத்தல் மற்றும் விவசாய உற்பத்திகளின் சந்தைப்படுத்தலினை ஒருங்கிணைத்தல
  • மொத்த வியாபாரிகள், நுகர்வோர் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களை ஒருங்கிணைப்பதனூடாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மட்டத்தில் உள்நாட்டு விவசாய உற்பத்திகளின் விலையினைப் பேணும் நோக்குடன் விசேட பொருளாதார நிலையங்களினைத் தாபித்தல்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினினால் 2015 செப்ரெம்பர் 21 ஆம் திகதிய 1993/13 ஆம் இல. அதி விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உரித்தளிக்கப்பட்ட தொழிற்பாடுகளும் பொறுப்புக்களும்.

  • v  கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருகின்ற திணைக்களங்கள் மற்றும் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களுக்கு உரித்தளிக்கப்பட்ட நோக்கெல்லையினுள் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்தல் மற்றும் கருத்திட்டங்களை அமுல்படுத்துதலும் மதிப்பாய்வு செய்தலும்
  • கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல்
  • பிரதேச மற்றும் கிராமிய அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் உபாய அபிவிருத்தி கொள்கைகளை வகுத்தல்
  • கிராமிய உள்ளக கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறிய தொழில்முயற்சி அபிவிருத்தி நடவடிக்கைகள்
  • கிராமிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதிசார் உதவிகளை வழங்குதல்
  • கால்நடைத் துறை உற்பத்திகளை அதிகரிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்
  • விலங்கு நலன் பேணலும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளும்
  • கால்நடை உற்பத்திகளினை ஊக்குவித்தல், இனவிருத்தி மற்றும் ஊக்குவித்தலுக்கான நடவடிக்கைகளினை எடுத்தல்
  • நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஆராய்ச்சியினை விரிவாக்குதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினை எடுத்தல் மற்றும் ஆராய்ச்சி காண்புகள் மீது சார்ந்திருக்கின்ற உற்பத்திகளின் கணிய விருத்தி
  • விலங்கு இனத்தொகையினை அதிகரிப்பதற்கான விஞ்ஞான முறையிலான  இனப்பெருக்க முறையினை பரவச் செய்தலும் நோய்களிலிருந்து விலங்குகளைப் பாதுகாத்தலும்

எமது அமைச்சுக்கு உரித்தளிக்கப்பட்ட மேற்குறித்த நடவடிக்கைகள் பின்வரும் 04 பிரதான துறைகளின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றன. அவையாவன,

  • கிராமிய மக்களினை வலுவூட்டுவதற்கான வாழ்வாதார அபிவிருத்தி
  • தரமான கால்நடை உற்பத்திகளினை அதிகளவில் வழங்குவதனூடாக கால்நடை உற்பத்தியின் உள்நாட்டு தேவையினை நிறைவு செய்தல்.
  • கால்நடை உற்பத்திகளின் சந்தைப்படுத்தல், செயல்முறைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்த்தலுக்கான முறையான சந்தைப்படுத்தல் வலையமைப்பினை உருவாக்குவதன் மூலம் சந்தையினை ஒழுங்கமைத்தல்.
  • உற்பத்தியினை மேற்கொள்கின்ற உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கையினூடாக உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுடனான போட்டியினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் பொறுப்புக்களையும் தொழிற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கென உரித்தளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு;

  1. விலங்கு வேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களம்
  2. தேசிய கால் நடை அபிவிருத்திச் சபை
  3. மில்கோ கம்பனி (தனியார்) லிமிட்டட்
  4. மஹாவலி கால்நடை  தொழில்முயற்சிகள்
  5. இலங்கை பறவைகள் வளர்ப்பு அபிவிருத்தி தனியார் கம்பனி லிமிட்டட்
  6. நெல் சந்தைப்படுத்தல் சபை
  7. விசேட பொருளாதார நிலையங்கள்
  8. கிராமிய அபிவிருத்தி நிதியம்
  9. கிராமி யபொருளாதார அபிவிருத்தி நிதியம் (நிதி)
  10. ஜனத்திரிய நிதியம் (கிராமேதய சபை நிதியம்)
Last Updated on Thursday, 03 November 2016 05:42  

சமீப செய்திகள்

A new paddy store costly Rs. 30 Mn in Lunugamwehera A new paddy store costly Rs. 30 Mn in Lunugamwehera
Foundation Stone laying Ceremony for the...
Foundation Stone laying Ceremony for the new paddy store Foundation Stone laying Ceremony for the new paddy store
Foundation Stone laying Ceremony for the...

காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 12-10-2017.